உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நிறைவு நாளில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவிற்கு ஜூன் 30ல் கம்பம் நடப்பட்டது. ஜூலை 6 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.அம்மன் தினமும் ரிஷபம், குதிரை, சிம்மம், யானை, அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, தொட்டில் கட்டி, அக்னிசட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

மலர் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அம்மனை தரிசனம் செய்தார். பத்து நாட்கள் நடந்த திருவிழாவிற்கு டி.எஸ்.பி., நல்லு தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கினர். சத்ய சாயி சேவா சங்க தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு உதவிடும் பணியில் ஈடுபட்டனர். ஜூலை 21ல் மறுபூஜை, பாலாபிஷேகம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரி, மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !