உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவசக்தி வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி துவக்கம்

நவசக்தி வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி துவக்கம்

பெ.நா.பாளையம்: ஆஷாட நவராத்திரி விழாவை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் நவசக்தி வாராஹி அம்மன் கோயிலில் மயிலிறகு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நவசக்தி வராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரியை ஒட்டி வரும், 23ஆம் தேதி வரை தினசரி மாலை சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நேற்று முதல் நாள் மாலை வாராஹி அம்மன் மயிலிறகு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவை ஒட்டி ஊஞ்சல் உற்சவம், அலங்காரம், ஹோமம் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !