உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தலூர் முருகன் கோவிலில் சங்காபிஷேகம்; மண்டல பூஜை நிறைவு

பந்தலூர் முருகன் கோவிலில் சங்காபிஷேகம்; மண்டல பூஜை நிறைவு

பந்தலூர்: பந்தலூர் ஸ்ரீ முருகன் கோவில் மண்டல பூஜை நிறைவு நாளில், சங்காபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பந்தலூர் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்ற நிலையில், இன்று நிறைவு விழா நடந்தது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி சுப்பிரமணியர் ஹோமம், சகல தேவதா ஹோமம் நடத்தப்பட்டு, சங்காபிஷேக பூஜை நடந்தது. மேலும் ஓமம் வேதிகா பூஜை நடத்தப்பட்டு, ஸ்ரீ முருகப் பெருமானுக்கு மகா சங்காபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். பூஜையில் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைவர் ஹரிராமன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ் தலைமையிலான நிர்வாகத்தினர், கோவில் மகளீர் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !