உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைரோடு தர்மாபுரி இரட்டை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

கொடைரோடு தர்மாபுரி இரட்டை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

கொடைரோடு; கொடைரோடு அருகே தர்மாபுரி இரட்டை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் மேளதாளம் வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. யாகசாலையில் கணபதி ஹோமம்,கோபூஜை,லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, உயிரூட்டல் நிகழ்ச்சி உள்ளிட்ட ஆறுகால யாக வேள்விகள் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கடம் புறப்படும் நிகழ்ச்சியை அடுத்து, சீனிவாச நரசிம்ம சர்மா சுவாமிகள் தலைமையில், சுரேஷ் பவுன் சிவாச்சாரிகள் முன்னிலையில் மங்கல இசையுடன் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டு இராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மற்றும் தலைவர் நாச்சிமுத்து, பூசாரி மாரிமுத்து, வாரியன் மணிவேல் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !