திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமான் திருவூடல் உற்சவம்
ADDED :2 minutes ago
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவம் ஒன்பதாம் நாள், கோவில் மூன்றாம் பிரகாரம் மகிழ மரம் அருகே சிவகாமி சமேத நடராஜர் பெருமானுக்கு திருவூடல் உற்சவத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் ஜூலை 8 ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் ஒன்பதாம் நாளான இன்று கோவில் மூன்றாம் பிரகாரம் மகிழ மரம் அருகே சிவகாமி சமேத நடராஜர் பெருமானுக்கு திருவூடல் உற்சவத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.