உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையம் சாஸ்தா கோயிலில் 31ம் தேதி வருஷாபிஷேக விழா

கடையம் சாஸ்தா கோயிலில் 31ம் தேதி வருஷாபிஷேக விழா

ஆழ்வார்குறிச்சி: கடையம் சூட்சமுடையார் சாஸ்தா கோயிலில் வரும் 31ம் தேதி முதலாம் வருஷாபிஷேக விழா நடக்கிறது.கடையத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் சூட்சமுடையார் சாஸ்தா கோயில் உள்ளது.கோயிலில் வரும் 31ம்தேதி முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது.காலை 9 மணிக்கு மேல் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாவாஜனம், வேதிகார்ச்சனை, 1008 சங்காபிஷேகம், மகா கணபதி ஹோமம், மூர்த்தி ஹோமம், அஸ்த்தர ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.விநாயகர், சாஸ்தா, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம், விசேஷ பூஜைகள் நடக்கிறது.காலை 11 மணிக்கு மேல் 12மணிக்குள் விமானம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு முதல் வருஷாபிஷேகமும் சிறப்பு அலங்கார தீபாரதனையும் நடக்கிறது.ஏற்பாடுகளை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் தங்கராஜா, பொருளாளர் அருணாசலம், துணை தலைவர் ராமசாமி, துணை செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !