குத்துக்கல்வலசை கோயிலில் 8ம் தேதி பூக்குழி திருவிழா
ADDED :4676 days ago
தென்காசி: குத்துக்கல்வலசை முத்துமாரியம்மன் கோயிலில் வரும் பிப்.8ம் தேதி பூக்குழி திருவிழா நடக்கிறது.தென்காசி அருகே குத்துக்கல்வலசை முத்துமாரியம்மன் கோயிலில் வரும் பிப்.8ம் தேதி பூக்குழி திருவிழா நடக்கிறது. அன்று காலை கணபதி ஹோமம், துர்கா சூக்த ஹோமம், ஸ்ரீசூக்த ஹோமம், மகாலட்சுமி பூஜை, அம்பாளுக்கு அபிஷேகம் ஆகியவை நடக்கிறது. மாலை நையாண்டி மேளததுட் குற்றால தீர்த்தம் மற்றும் அக்னி சட்டி ஊர்வலம் நடக்கிறது.இரவு கோயில் முன் பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். இதன் பின்னர் வில்லிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாம பூஜை நடக்கிறது. முன்னதாக 7ம் தேதி அம்பாளுக்கு மாக்காப்பு அலங்காரம் மற்றும் விளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.