உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹலசூரு சுயம்பு காளியம்மன் கோவிலில் ஜெர்மனி, அமெரிக்கா பக்தர்கள் தரிசனம்

ஹலசூரு சுயம்பு காளியம்மன் கோவிலில் ஜெர்மனி, அமெரிக்கா பக்தர்கள் தரிசனம்

பெங்களூரு; ஹலசூரு சுயம்பு காளியம்மன் கோவிலில் ஜெர்மனி, அமெரிக்கா நாட்டினர் அம்மனை தரிசனம் செய்தனர். 


பெங்களூரு, ஹலசூருவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சுயம்பு ஸ்ரீ காளியம்மன் கோவில். இத்தலத்தின் மூலவரான காளி தேவி, பூமிக்கு அடியில் இருந்து சுயம்புவாகத் தோன்றியவர். அன்னை காளியின் திருவுருவத் தலை இன்றும் வளர்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. ஹலசூரு பகுதி மக்களுக்கும் காவல் தெய்வமாக விளங்கும் இத்தலத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மனமுருகி அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் வஸ்திரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !