குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயிலில் பக்தர்களுக்கு ‘ஷவர்’ வசதி
சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு சுரபி நதிக்கரையில் பக்தர்கள் குளிக்க " ஷவர் " வசதியை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா திருப்பணிகள் நடப்பதால் மூன்றாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இருந்த போதும் நீதிமன்ற உத்தரவுப்படி கோயிலிற்கு வரும் பக்தர்களுக்கு வழக்கம் போல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆடிப் பெருந்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கோயிலிற்கு முன்பு உள்ள சூரபி நதியில் குளித்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது சூரபி நதியில் தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. எனவே கோயில் நிர்வாகம் சுரபி நதிக்கரையில் பத்தர்கள் குளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடாக 20 க்கும் மேற்பட்ட ஷவர்களை தற்காலிகமாக அமைத்துள்ளது. பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்புகள், நிழற் பந்தல், குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.