ஆடி வெள்ளி : போடி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
போடி: ஆடி வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர்.
* போடி அருகே மலை மீது உள்ள வடமலை நாச்சி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வடமலை நாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.
* போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் சவுடேஸ்வரி அம்மன், குலாலர் பாளையம் காளியம்மன் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனின் தரிசனம் பெற்றனர். கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.