ஆடி வெள்ளி; கீழக்கரை கோயில்களில் சிறப்பு பூஜை
கீழக்கரை: கீழக்கரை அருகே வைகை கிராமத்தில் புத்தாள கண்மாய் கரைஓரத்தில் சிவகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் சிவகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் முருகன் செய்திருந்தார். கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை சிவகாளி அம்மன் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் 41 ஆம் ஆண்டு ஆடி உற்ஸவத்தை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. பின்னர் அலகு குத்தி எடுத்து பக்தர்கள் நான்கு ரத வீதியில் உலா வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவும், அதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மஞ்சமாதாவிற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பெண்ளுக்கு தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.