உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோவிலில் ஆடி மாத பிறப்பு சிறப்பு பூஜை; ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம்

பழநி முருகன் கோவிலில் ஆடி மாத பிறப்பு சிறப்பு பூஜை; ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம்

பழநி: பழநி முருகன் கோவிலில் பராபவ ஆண்டு ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.


பழநி கோயிலில் பராபவ ஆண்டு ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பின் வெள்ளிக் கவச அலங்காரம், தீபாராதனை நடந்தது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !