உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

 காஞ்சிபுரம்: ஆடி முதல் வெள்ளியை யொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று ஆடி திருவிழா விமரிசையாக நடந்தது.


காஞ்சிபுரம் நெட்டேரி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடந்தது. காஞ்சிபுரம் வெள்ளகுளம் சந்தவெளி அம்மன் கோவிலில், பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் சுமங்கலி மற்றும் கன்னி பெண்கள் நாக சிலைகளுக்கு பூஜை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டனர். காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளி அம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !