முதுகுளத்தூர் ஐயப்பன் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜை
ADDED :2 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா டிரஸ்ட் சார்பில் ஆடி மாத சிறப்புபூஜை நடந்தது.குருநாதர் திருமால் தலைமை வகித்தார். தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர்.கணபதி ஹோமம் பூர்ணாஹீதி,யாகசால பூஜைகள் நடந்தது.படிபூஜை,பஜனை வழிபாடு நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்புபூஜை நடந்தது. குருநாதர் ராஜன் தலைமை வகித்தார். படிபூஜை,அன்னதானம் நடந்தது. இதேபோன்று முதுகுளத்தூர்,கமுதி பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஆடி மாத சிறப்புபூஜை நடந்தது.