உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

மதுரையில் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

மதுரை: ஒடிசா மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை பிரசித்தி பெற்றது. மதுரை மக்களும் இந்த ஆன்மிக அனுபவத்தை பெறும் வகையில் திருப்பாலை இஸ்கான் ஸ்ரீ கிருஷ்ணா பலராமர் கோயில் சார்பில் நேற்று கோலாகலமாக ஜெகந்நாதர் ரத யாத்திரை நடத்தப்பட்டது.

ரிசர்வ் லைன்மாரியம்மன் கோயில் அருகில் இருந்துதொடங்கியது. தேரில் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ராதேவியின் மூல விக்கிரகங்கள் எழுந்தருள, மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அய்யர்பங்களா வழியாக தேர் வலம் வந்து திருப்பாலை இஸ்கான் பலராமர் கோயிலை அடைந்தது. விழாவில் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் வகையில், இசைக்குழுவினரின் சிறப்பு பஜனையும், ஹரிநாம சங்கீர்த்தனமும் நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.

இஸ்கான் நிர்வாகிகள் கூறுகையில், வாழ்வில் மங்களம் பெறும் வகையில், புரி ஜெகந்நாதரின் அருளை மதுரை மக்கள் பெறும் வகையில் இஸ்கான் சார்பில் 3வது முறையாக ஜெகந்நாதர் ரத யாத்திரை நடத்தப்பட்டது.

இதன்மூலம் மனிதர் களின் வாழ்வில் பல நன்மைகள் கிடைக்கும் என வைணவ சமயம் கூறுகிறது.

ஹரிநாம சங்கீர்த்தனத்தில் கலந்துகொள்வதன் மூலம், கல்வி,வேலை, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !