உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 14ம் ஆண்டு 1008 விளக்கு பூஜை

14ம் ஆண்டு 1008 விளக்கு பூஜை

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் அமராவதி புதுார் சாரதா மகளிர் கல்லுாரி மற்றும் திருவாடானை சாரதா சேவா சமிதி சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மைக்காக ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த விளக்கு பூஜை 14 வது ஆண்டாக நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில் திருவாடானை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். முன்னதாக ஆதிரெத்தினேஸ் வரர், சிநேகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !