உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு அம்மன்: குழந்தை வேணுமா பாபநாசம் வாருங்கள்!

தினமும் ஒரு அம்மன்: குழந்தை வேணுமா பாபநாசம் வாருங்கள்!

குழந்தை வரம் பெற திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உலகநாயகி அம்மனை தரிசிப்போம். இந்தியா முழுவதும் 51 சக்தி பீடங்கள் உள்ளன. இதை ‘விமலை பீடம்’ என அழைக்கின்றனர்.
 
ஒன்பது நவக்கிரகங்களும் சிவனை வழிபட்ட சிவன் கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளன. அதில் சூரியன் வழிபட்ட கோயில் இது. இங்கு நாம் வழிபட்டால் சூரியனால் உண்டான தோஷம் விலகும். இங்கு தான் சிவபெருமான் தனது திருமணக் கோலத்தை அகத்தியருக்கு காட்டினார். இங்கு அகத்திய முனிவரும், அவரது மனைவியும் சிவனை வணங்கியபடி உள்ளனர்.

உலகநாயகி அம்மன் நின்ற கோலத்தில் இருக்கிறாள். சன்னதிக்கு முன்பாக கல் உரல் ஒன்று உள்ளது.  இதில் விரலி மஞ்சளை இடித்து, அந்த மஞ்சளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்வது பெண்களின் வழக்கம். இந்த அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியமும், குழந்தைப் பேறும் உண்டாகும்.  

சுகப்பிரசவம் நடக்க அம்மனை வேண்டி கோயிலிலேயே வளைகாப்பை நடத்துகின்றனர். உச்சிக்காலத்தின் போது தாமிரபரணி நதிக்கு பூஜை நடக்கிறது.

எப்படி செல்வது: அம்பாசமுத்திரத்தில் இருந்து 9 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 1:00 மணி; மாலை 4:00 – 8:30 மணி
தொடர்புக்கு: 04634 – 293 757, 223 268


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !