ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அசாம் கவர்னர் தரிசனம்
ADDED :10 hours ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அசாம் கவர்னர் லட்சுமணன் பிரகாஷ் ஆச்சார்யா குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
ராமேஸ்வரம் வந்த அசாம் கவர்னர் லட்சுமணன் பிரகாஷ் ஆச்சார்யாவை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன் வரவேற்றார். பின் நேற்று காலை அக்னி தீர்த்த கடல் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் அசாம் கவர்னர் குடும்பத்தினருடன் புனித நீராடினார். இதன்பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு கோயில் குருக்கள் பிரசாதம் வழங்கினார். அங்கிருந்து தனுஷ்கோடி சென்ற அவர், கோதண்டராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின் அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்டார்.