மானாமதுரை சுந்தர விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேக விழா
ADDED :1 days ago
மானாமதுரை; மானாமதுரை சுந்தரபுரம் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் கோயிலில் கடந்த ஜூன்.4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.பின்னர் கோயில் மண்டபத்தில் 108 சங்காபிஷேகம் நடைபெற்று ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராஜேந்திர பிரசாத் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.