உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

கடலுார் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

கடலுார்: பராசக்தி மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கடலுார் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பராசக்தி மாரியம்மன் கோவிலில், 61ம் ஆண்டு செடல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, 108 பால்குட ஊர்வலம் துவங்கி, பராசக்தி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம், எல்லை கட்டுதல், கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரினம் செய்தனர். இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாளை காலை 8:00 மணிக்கு அபிஷேகம், பகல் 12:30 மணிக்கு சாகை வார்த்தல், மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. 25ம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 7:00 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !