உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் செப்., 17ம் தேதி கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு 48 நாட்களுக்கு(நவ.,3 வரை) மண்டல பூஜை நடக்கும். ஆனால் மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.,18ம் தேதி துவங்கி இன்று அக்.,2 வரை நடக்கிறது. மாதந்தோறும் திருவிழா இருப்பதால் மாத திருவிழாவை கணக்கிட்டு மண்டல பூஜை நடத்தப்படுவது இக்கோயில் வழக்கம். அதன்படி வரும் 11ம் தேதி நவராத்திரி உற்ஸவம் துவங்குவதை முன்னிட்டு இன்று மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. இன்றைய நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !