உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்திலி பாலமுருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

இந்திலி பாலமுருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி: இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு நடந்தது.


கள்ளக்குறிச்சி இந்திலி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் செவ்வாய் கிழமையொட்டி, நேற்று காலை 10.30 மணிக்கு வாசணை திரவியங்களால் மகாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானின் போற்றி சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு வழிபாடு நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் தேவா குருக்கள் செய்து வைத்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !