வாலாந்தரவை மாரியம்மன் கோயில் விழா
ADDED :64 days ago
ராமநாதபுரம்: வாலாந்தரவை ஊராட்சி வழுதுார் மாரியம்மன் கோயில் குழுமை விழா ஜூலை 14ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அபிஷேகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக கோயில் பூஜாரி துரைராஜ் கரகம் எடுத்து ஊர்வலம் வந்து அம்மனுக்கு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பூஜாரிகள் அருள்வாக்கு கூறினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.