காளஹஸதி தர்மராஜர் கோயிலில் திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3 minutes ago
ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீகாளஹஸதி சிவன் கோயில் துணை கோயிலான தர்மராஜர் கோயிலில், திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் கோயில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவின் போது கோயில் செயல் அதிகாரி பி.கே.வெங்கடேஷு, துணை செயல் அதிகாரி என்.ஆர்.கிருஷ்ண ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் குர்ரப்பசெட்டி ஆகியோர் உடனிருந்தனர். திருமண விழாவிற்குப் பிறகு, இன்று புதன்கிழமை வருடாந்திர விழாவின் ஆறாம் நாள் காலை கோயிலில் இருந்து திரௌபதி சமேத தர்மராஜர் திருமணக் கோலத்தில் ஊர்வலமாக ஸ்ரீகாளஹஸ்தி நகர நான்கு மாட வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர் . இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.