உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  அச்சிறுபாக்கம் செல்லியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

 அச்சிறுபாக்கம் செல்லியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே மதுரா புதுப்பேட்டை செல்லியம்மன், முத்தாலம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.


மதுரா புதுப்பேட்டை செல்லியம்மன், முத்தாலம்மன் கோவிலில் கூல்வார்த்தல் திருவிழா, ஜூலை 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை, அப்பகுதி மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து தரிசித்தனர். அதை தொடர்ந்து தீச்சட்டி, பால்குடம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். மாலை 5 மணிக்கு அம்மன் மலைக்கு புறப்படுதல் நிகழ்வு நடந்தது. பின், 12 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா நடந்தது. விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, செல்லியம்மன், முத்தாலம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !