உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலவசம் வேண்டாம் என்கிறார் சாய்பாபா

இலவசம் வேண்டாம் என்கிறார் சாய்பாபா

* எதையும் இலவசமாகப் பெறாதே. அது சுயமரியாதையை கெடுக்கும்.
* சுவையான பழம் தரும் மரத்தைப் போல, பிறருக்கு உதவி செய்.
* குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடு.
* கடமையை செய்யாமல் நேரத்தை வீணாக்காதே.  
* எந்த பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.
* போற்றுதலையும், துாற்றுதலையும் பொருட்படுத்தாதே.       
* ரோஜாவின் அழகையும், மணத்தையும் பார்ப்பவன் அறிவாளி. அதன் முள்ளை பார்ப்பவன் முட்டாள்.
* நாக்கின் ருசிக்காக அலையாதே. விரைவில் செரிக்கும் உணவை சாப்பிடு.
* உணவை வீணாக்காமல் இருந்தால் அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.  
* உணவு, பேச்சு இரண்டும் நாக்கு சம்பந்தப்பட்டது. நாக்கை கட்டுப்படுத்தினால் வாழ்வு நலமாகும்.    
* உன்னிடம் உள்ள குற்றத்தை கவனி. பிறரிடம் உள்ள நல்ல குணத்தைப் பார்.
* அறிவுரை சொல்வதை விட, பயனுள்ள வேலையைச் செய்.     
* உலகம் ஒரு பல்கலைக்கழகம். சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியரே.      
* வாழ்வில் குறுக்கிடும் மேடு, பள்ளங்களை கண்டு கலங்காதே. அதை பாடமாக எடுத்துக்கொள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !