முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயிலில் 2050 விளக்கு பூஜை
ADDED :18 hours ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு கடந்த ஐந்து நாட்கள் முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை,அபிஷேகம், தீபாரதனை நடந்தது.50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு 2050 விளக்குபூஜை நடந்தது.விளக்கு ஏற்றி,108 போற்றி பாடல்கள் பாடி கூட்டு வழிபாடு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் முதுகுளத்தூர், தூரி,செல்வநாயகபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஜூலை 27ல் அக்னிசிட்டி ஊர்வலம், ஜூலை 28ல் பால்குடம் ஊர்வலம், சிம்மவாகனத்தில் அம்மன் வீதி உலா, ஜூலை 29ல் வேல்குத்தி பூக்குழி, இறங்குதல்,பூப்பல்லாக்கில் அம்மன் வீதி உலா,ஜூலை 30ல் முளைப்பாரி ஊர்வலம்,மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.