செஞ்சியில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி உற்சவம்
ADDED :1 days ago
செஞ்சி: செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளைபெற்றாள் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நடந்தது. அதனையொட்டி, கடந்த 14ம் தேதி கோபூஜை, கணபதி ஹோமத்துடன் 11 நாள் உற்சவம் துவங்கியது. தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், சக்தி பூஜையும், மாலையில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இரவு சுவாமி ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.