உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழச்சித்திரை வீதி பாதுகாக்கப்பட்ட பகுதியாகிறது

கீழச்சித்திரை வீதி பாதுகாக்கப்பட்ட பகுதியாகிறது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கீழ்ச்சித்திரை வீதியில் உள்ள பக்தர்களின் காலணி, அலைபேசி பாதுகாக்கும் இடம், பாதுகாப்பு காரணங்களுக்காக தெற்கு சித்திரை வீதிக்கு மாற்றப்பட உள்ளது.

கோயிலின் 4 சித்திரை வீதிகளிலும் பக்தர்களின் காலணி, அலைபேசிகளை பாதுகாக்கும் இடம் உள்ளது. இதில் கீழச்சித்திரை வீதியில் மட்டும் கிழக்கு கோபுரத்திற்கு ஒன்றும், அம்மன் சன்னதி ஒன்றும் என இரண்டு பாதுகாக்கும் இடங்கள் உள்ளன. பெரும்பாலானோர் அம்மன் சன்னதி அருகேயுள்ள இடத்தில்தான் காலணிகளை விட்டுவிட்டு வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கிறது. கோயிலுக்கு வி.வி.ஐ.பி.,க்கள் இந்த வழியாகதான் வந்து செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க தெற்கு சித்திரை வீதிக்கு காலணி, அலைபேசி பாதுகாக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு முந்தைய போலீஸ் கமிஷனர் லோகநாதன் பரிந்துரைத்தார்.

கோயில் அறங்காவலர்கள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. செப்.,17 கும்பாபிஷேகத்திற்கு பிறகே பயன்பாட்டிற்கு வரஉள்ளது. இதன்மூலம் கீழச்சித்திரை வீதி ‘பாதுகாக்கப்பட்ட’ பகுதியாக மாற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !