இன்று தேய்பிறை சஷ்டி: முருகனை வழிபட தோல்விகள் நீங்கும், தொட்ட காரியம் வெற்றி பெறும்!
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது.
சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில், பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஆறாவது திதியை தேய்பிறை சஷ்டி என்று அழைக்கிறோம். இந்த ஆறாவது திதி ஆறுமுகனுக்கு உரிய திதியாகும். : "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பது மிகுந்த பலன் தரும். கஷ்டங்கள் நீங்க: தீராத பிரச்சனைகள், கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லை, திருமணத் தடைகள் மற்றும் நீண்ட நாள் நோய்களால் அவதிப்படுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதமிருப்பவர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவும், குடும்பத்தில் அமைதியும் நிலவும். இன்று சரவணபவ சொல்லி ஆறுமுகனை ஆராதிப்போம்..! மேன்மை பெறுவோம்!