உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா; அம்மனுக்கு அபிஷேகம்

அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா; அம்மனுக்கு அபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில், பால்குட விழா நடைபெற்றது. முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள், திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து பால் குடத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, அரசாள வந்த அம்மன் கோயிலை அடைந்தனர். பின்னர், பக்தர்கள் கொண்டு வந்திருந்த பால் மூலம், மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்னர், நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஹிந்து சமய மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !