உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவலுார் கங்காதீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

கருவலுார் கங்காதீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

கருவலுார்: கருவலுாரில் உள்ள ஸ்ரீ கமலாம்பிகை உடனமர் கங்காதீஸ்வரர் கோவிலில், 108 சங்காபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.


அவிநாசி, மங்கலம் ரோட்டில், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில், அவிநாசி சைவ மகா சபை சார்பில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதன், முதலாம் ஆண்டு நிறைவான தினத்தை முன்னிட்டு, கங்காதீஸ்வரர் கோவிலில், 108 சங்காபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி, 108 சங்குகளில் தீர்த்தம் நிரப்பப்பட்டு யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அவை கங்காதீஸ்வரர் மற்றும் கமலாம்பிகைக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில், திரளான சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !