உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி தைப்பூச திருவிழா நிறைவு: தெப்போற்சவத்தில் சுவாமி!

பழநி தைப்பூச திருவிழா நிறைவு: தெப்போற்சவத்தில் சுவாமி!

பழநி: தைப்பூசதிருவிழாவின் நிறைவாக பழநியில் நேற்று தெப்போற்சவம் நடந்தது. பழநி தைப்பூசத்திருவிழா கடந்த 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஆறாம் நாளில் (ஜன.,26) திருக்கல்யாணமும், வெள்ளித்தேரோட்டமும் நடந்தது. விழாவின் ஏழாம் நாளில் (ஜன.,27) தைப்பூச தேரோட்டம் நடந்தது. பத்தாம் நாளான நேற்றிரவு தெப்போற்சவம் நடந்தது. தெப்போற்சவத்தையொட்டி பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை தெப்பத்தின் மைய மண்டபத்திற்கு எழுந்தருளினர். 6 கலசங்கள் வைத்து கலச பூஜையும், சுப்ரமண்யர் ஹோமமும், சோடச அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. தெப்பத்தேரில் சுவாமி எழுந்தருளினார். தெப்பத்தை சுற்றி வந்து, நான்கு திசைகளிலும் எழுந்தருளி, ஆராதனை நடந்தது. தெப்பத்தின் அருகே வாண வேடிக்கையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர். பின்னர் கொடி இறக்கம் செய்யப்பட்டு, யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த பிரதான கும்பம் மலைகோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !