உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரச்சனைக்கு தீர்வு அமைதியாக இருப்பது: ஸ்ரீ அன்னை

பிரச்சனைக்கு தீர்வு அமைதியாக இருப்பது: ஸ்ரீ அன்னை

* அமைதியாக இரு. இதுவே எல்லா பிரச்னைக்கும் தீர்வு.  
* கடவுளுக்கு தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.   
* கடவுள் யாரையும் தண்டிக்க மாட்டார். அவர் அன்பே உருவானவர்.    
* கடவுள் உன்னிடம் எதிர்பார்ப்பது உழைப்பு ஒன்றே.   
* ஒரு முயற்சியில் எவ்வளவு கடினம் இருக்கிறதோ, அந்தளவுக்கு வெற்றி வரும்.   
* முயற்சிக்குரிய பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும்.     
* மனிதப்பிறவி என்பது மதிப்பிட முடியாதது. அதை சரியாக பயன்படுத்து.    
* ஒருபோதும் உணர்ச்சி வசப்படாதே. மீறினால் முடிவு எடுக்க முடியாது.
* பேச்சை விட செயலுக்கு முன்னுரிமை கொடு.    
* கோபம் முட்டாள்தனத்தின் அறிகுறி.   
* பிறர் உன்னை எப்படி நடத்தினாலும் கோபப்படாதே.  
* பிறருக்கு புத்திமதி கூறும் முன்பாக அத்தகுதி உனக்கு உள்ளதா என கவனி.
* ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான வழிமுறை.       
* நேர்மையாக வாழ்ந்தால் பெரிய பரிசு ஒன்று கிடைக்கும்.
* உற்சாகமுடன் வேலை செய். களைப்பு தோன்றாது.    
* நேர்மையை விட சிறந்த பாதுகாப்பு வேறில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !