உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி தரும் தேவிபட்டினம் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி

வெற்றி தரும் தேவிபட்டினம் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி

நாட்டிலுள்ள 51 சக்தி பீடங்களில் தமிழகத்தில் மட்டும் 18 உள்ளன. அவற்றில், வெற்றியை தரும் வீர சக்தி பீடம் இது. ராவணனுடன் போரிட இலங்கை செல்லும் முன், ராமபிரான் தேவிபட்டினத்தில் உப்பூர் விநாயகரை தரிசித்து விட்டு, வீரசக்தி பீடத்தில் மகிஷாசுரமர்த்தினி எனும் உலக நாயகி அம்மனின் ஆசி பெற்று சென்று போரில் வென்றதாக ஐதீகம்.

ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் கடல் ஓரத்தில் அமைதியான சூழலில் கோவில் அமைந்துள்ளது. ஐந்து நிலைகளுடன் ஏழு கலசங்களுடன் கூடிய ராஜகோபுரம். கருங்கல் லான 16 கால் மண்டபம் அடுத்து அர்த்தமண்டபம் தாண்டினால், கருவறையில் உலகநாயகி அருள்பாலிக்கிறாள். எதிரில் சர்க்கரை தீர்த்தம்.

பிரம்மாவை நோக்கி தவம் இருந்த மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு காட்சி அளித்தார் பிரம்மா. என்ன வரம் வேண்டும் என்றார். சாகாவரம் கேட்டான். அது சாத்தியம் அல்ல, வேறு வரம் கேள் என்றார். ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று கேட்டான்.

பிரம்மா கொடுத்தார். என்னை வெல்லும் ஆற்றல் எந்த பெண்ணுக்கு இருக்கிறது என்ற ஆணவத்தில் ஆடினான் அசுரன். தேவர்கள், முனிவர்களை கொடுமை செய்தான். அவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

சிவனும் பராசக்தியை உருவாக்கி சூலத்தை கையில் கொடுத்தார். திருமால், பிரம்மா, இந்திரன், அக்னி, வருணன், வாயு, ஐராவதம், எமன், சமுத் திரம், குபேரன், ஆதிசே ஷனும் அவரவர் பாணங்களை கொடுத்தனர். 18 கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி, சிம்ம வாகனத்தில் சென்று அசுரனை வதம் செய்து மகிஷாசுரமர்த்தினி ஆனாள். தைரியம் இல்லாதவர்கள், எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலுக்கு வந்து சென்றால் பயங்கள் விலகும் என்று கூறப்படுகிறது.

முகவரி:
உலகநா யகி அம்மன் கோவில்,
தேவிபட்டினம்.
போன்: 9894691363
நேரம்: 8.00 -12.00 மணி வரை, ~ 4.00-8.00 மணி வரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !