வடமதுரை கோயில்களில் ஆடி சிறப்பு வழிபாடு; கூழ் வழங்கிய பக்தர்கள்
ADDED :1 days ago
வடமதுரை: ஆடி மாத 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வடமதுரை மீனாட்சியம்மன், பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன், அய்யலுார் மண்டபத்தோட்டம் சக்திமுத்து மாரியம்மன், தென்னம்பட்டி சவுடம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் வழங்கிய அரிசி, கம்பு, கேழ்வரகு கலந்த கூழ் தயாரிக்கப்பட்டு அபிஷேகத்திற்கு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.