காஞ்சிபுரம் தான்தோன்றி அம்மன் கோவில் ஆடி திருவிழா விமரிசை
ADDED :23 hours ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி தான்தோன்றி அம்மன் கோவில் ஆடி திருவிழா விமரிசையாக இன்று முடிவடைந்தது.. கடந்த 28-ம் தேதி, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் திரளான பக்தர்கள் பங்கேற்று, காப்பு கட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், திருவிழா நிறைவு நாளான இன்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தான்தோன்றி அம்மன், கிராமத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு பக்தர் ஒருவர், 10, 20, 50 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை, நேர்த்தி கடனாக செலுத்தினார்.