உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு; திருவையாறு காவிரியில் வழிபாடு செய்த பெண்கள், புதுமண தம்பதியினர்

ஆடிப்பெருக்கு; திருவையாறு காவிரியில் வழிபாடு செய்த பெண்கள், புதுமண தம்பதியினர்

தஞ்சாவூர் -  திருவையாறு காவிரி ஆறு புஷ்யமண்டப படித்துறையில் ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு, வறண்ட காவிரியில் புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் போர்வெல் மூலம் அமைக்கப்பட்ட ஷவரில்  புனித நீராடி காவிரி தாயை வழிபட்டனர்.


திருவையாறு காவிரி ஆறு புஷ்யமண்டப படித்துறையில் ஆடிபெருக்கு விழாவை முன் னிட்டு புதுமண தம்பதிகள் உட்பட ஏராளமானோர் காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி தாயை குடும்பத்தினருடன் வழிபடுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மேட்டூர் அணையில் போதுமான  தண்ணீர் இல்லாததால் விவசாய சாகுபடிக்கு தண்ணீர் திறக்காத நிலையில் ஆடி பெருக்கு நாளில் பக்தர்கள் காவிரியாற்றில் வழிபட ஏதுவாக திருவையாறு நகராட்சி நிர்வாகம் சார்பில்,காவிரி ஆற்றில்  போர்வெல் போட்டு  குழாய்கள் மூலம்  ஷவர்கள் அமைக்கப்பட்டு இருந்தது .


மேலும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியாற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் புஷ்ய மண்டப படித்துறையில்  குறைவான பெண்கள்,புதுமணத் தம்பதிகள் குடும்பத்தினருடன் போர் வெல் மூலம் அமைக்கப்பட்ட ஷவரில் புனித நீராடி புத்தாடை அணிந்து வெற்றிலை பாக்கு, பூ, பழங்கள் வைத்து தீபமேற்றி படித்துறையில் பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிற்றை  அணிவித்தனர். காவிரி அன்னை வறண்டாலும் எப்போதும் வாழ்வை அளிப்பார் என்பதை மாற்ற முடியாது என்பதால் வழிபாடுகளை கைவிடாமல் செய்ததாக பெண்கள் தெரிவித்தனர். ஐய்யாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் காவிரி ஆற்றின் புஷ்யமண்ட பத்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சுவாமி நான்கு வீதிகளில் வீதியுலா வந்து கோவில் சன்னதி அடைந்தது. இதில் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !