உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மனை தரிசித்தால் நோய் தீரும்!

கோட்டை மாரியம்மனை தரிசித்தால் நோய் தீரும்!

நோய் தீர... திண்டுக்கல் கோட்டை மாரியம்மனை தரிசிப்போம்.

300 ஆண்டுக்கு முன் திண்டுக்கல் மலைக் கோட்டையில் போர் வீரர் சிலர் மாரியம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். அன்று முதல் இவள் திண்டுக்கல்லின் காவல் தெய்வமாக திகழ்கிறாள். இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி தியான கோலத்தில் இருக்கிறாள்.

நல்லவர்களை காக்கவும், தீயவர்களை அழிக்கவும் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதம், அரிவாள், வில், மணி, குங்குமக் கிண்ணம் ஏந்தி இருக்கிறாள். நோய்கள் தீர வேண்டும் என மஞ்சள், உப்பை காணிக்கை தருகின்றனர்.


ஆடி, மாசியில் முளைப்பாரி, அங்கப்பிரதட்சணம், தொட்டில் கட்டுதல், மலர்பந்து சாத்துதல், தீச்சட்டி, பூக்குழி இறங்குதல், கரும்புத் தொட்டில், மாவிளக்கு ஆகிய நேர்த்திக்கடன்களை செய்கின்றனர். ஆடி ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை பூஜைகள், மாசித்திருவிழா இங்கு விசேஷமானவை.  

எப்படி செல்வது: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 11:00 மணி; மாலை 5:00 –  8:00 மணி
தொடர்புக்கு: 94444 02440, 0451 – 242 7267  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !