உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ஆடி செவ்வாய்; தேய்பிறை சஷ்டி; அம்மன், முருகனை வழிபட்டு நல்வாழ்வு பெறுவோம்!

இன்று ஆடி செவ்வாய்; தேய்பிறை சஷ்டி; அம்மன், முருகனை வழிபட்டு நல்வாழ்வு பெறுவோம்!

ஆடி செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் மற்றும் அம்மன் வழிபாட்டிற்கு  உகந்த நாளாகும். இந்நாளில் முருகனை வழிபட வாழ்வில் உள்ள தடைகள், கடன் பிரச்சனைகள் தீரும்


ஆடி செவ்வாய்யில் அம்மனை வழிபட திருமண தடை நீங்கும், மாங்கல்ய பலம் கூடும். ஆடி செவ்வாயில் பெண்கள் மட்டுமே செய்யும் "அவ்வையார் நோன்பு" மிகவும் புகழ்பெற்றது ய்பிறை சஷ்டி என்பது முருகப்பெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகும். சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில், பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஆறாவது திதியை தேய்பிறை சஷ்டி என்று அழைக்கிறோம். இந்த ஆறாவது திதி ஆறுமுகனுக்கு உரிய திதியாகும். குழந்தை பாக்கியம்: "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பது மிகுந்த பலன் தரும். கஷ்டங்கள் நீங்க: தீராத பிரச்சனைகள், கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லை, திருமணத் தடைகள் மற்றும் நீண்ட நாள் நோய்களால் அவதிப்படுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதமிருப்பவர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவும், குடும்பத்தில் அமைதியும் நிலவும். இன்று வீட்டில் விளக்கேற்றி வழிபடுவோம்.. அம்மன் அருளோடு முருகன் அருளையும் பெறுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !