அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி சனிவார பூஜை
ADDED :12 hours ago
ரெட்டியார்சத்திரம்: புரட்டாசி சனி வாரத்தை முன்னிட்டு ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயிலில், 16 வகை திரவிய அபிஷேகத்துடன் வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள், உற்சவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது.
* கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், புரட்டாசி சனி வார சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
* சின்னாளபட்டி: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகாதீபாராதனை, அன்னதானம் நடந்தது.
* மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், சிறுமலை அடிவாரம் திருவேங்கடமுடையான் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது.