உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செண்டூர் கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழா

செண்டூர் கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழா

மயிலம்: மயிலம் அடுத்த செண்டூர் பகுதி விவசாயிகள் சார்பில் நேற்று ஆடிப்பெருக்கு விழா நடந்தது.

விழாவையொட்டி, மயிலம் மலைக் கோவிலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்து, ஆற்றங்கரையில் உள்ள தோப்பில் மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.பின், அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு படையலிட்டனர். இரவு 7:00 மணிக்கு வான வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !