உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி, ஆண்டாள் கோயில் திருவிழா ஏற்பாடுகள்; டி.ஐ.ஜி.ஆய்வு

சதுரகிரி, ஆண்டாள் கோயில் திருவிழா ஏற்பாடுகள்; டி.ஐ.ஜி.ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆக.12ல் ஆடி அமாவாசையும், ஆக. 14ல் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தேரோட்டமும் நடக்கிறது.

இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மருத்துவ வசதிகளை விருதுநகர், மதுரை மாவட்ட அரசு நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

நேற்று காலை 11:10 மணிக்கு மதுரை டி.ஐ.ஜி. அபிநவ் குமார் தாணிப்பாறையில் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயிலுக்கு செல்லும் பாதை, மினி கட்டுப்பாட்டு அறை, வனத்துறை, அலுவலகம் பக்தர்கள் வெளியேறும் பாதைகளை ஆய்வு செய்தார். அவருடன் மதுரை எஸ்.பி.தேவநாதன், விருதுநகர் எஸ்.பி. கவுதம் கோயல், டி.எஸ்.பி. பாலச்சந்திரன் உடனிருந்தனர்.

பின்னர் மதியம் 1:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் கீழ ரத வீதியில் டி.ஐ.ஜி தேரின் மீது ஏறியும், தேர் செல்லும் நான்கு ரத வீதிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், போக்குவரத்து நெருக்கடிகளை ஒழுங்குபடுத்தவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !