உத்தரகோசமங்கையில் தேய்பிறை பஞ்சமி
ADDED :6 hours ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மனுக்கு ஆடிப்பெருக்கு மற்றும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவர் வராகி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பழங்கள், கிழங்குகள், வஸ்திரங்கள் நைவேத்தியமாக வைக்கப்பட்டது.
பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டை பிடித்து வைத்தனர். எலுமிச்சம்பழம், தேங்காய் ஆகியவற்றில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
திருமணமான பெண்கள் புதிதாக மாங்கல்ய கயறுகளை மாற்றிக் கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.