உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவம் துவக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவம் துவக்கம்

திருவண்ணாமலை; அருணாசலேசுவரர் கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா அம்மன் சன்னதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை முதல் பங்குனி வரை, 12 மாதங்களும் உற்சவங்கள் நடக்கும். அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னாதி முன்பாக  உள்ள தங்க கொடிமரத்தில் மூன்று முறை கொடியேற்றமும் அம்மன் சன்னதியில் ஒருமுறை ஆடிபுரத்தின் போது கொடியேற்றம் நடைபெற்று 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இன்று காலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்ட தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து உண்ணாமுலையம்மன் சன்னதியில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தோன்றிய பராசக்தி அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பாக உள்ள தங்க கொடி மரத்திற்கு பால் சந்தனம் மற்றும் அபிஷேக திரவங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 


தொடர்ந்து விநாயகர் பராசக்தி அம்மன் கோவிலின் அம்மன் சன்னதியை வலம் வந்து கொடி மரத்தின் முன்பாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.சிவாச்சாரியர் வேத மந்திரங்கள் முழங்க, அஸ்வினி நட்சத்திரம், கடக லக்னத்தில் கொடி-யேற்ற விழா 6.15 மணிக்கு நடைபெற்றது. ஆடிப்பூரம் விழா 10 நாட்கள் நடைபெறும் தினமும் காலை, மாலை பராசக்தி அம்மன், மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நிறைவு நாளான, 10 நாள் விழாவில், ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை கோவில் வளாகத்திலுள்ள சிவகங்கை தீர்த்த குளக்கரை அருகில் உள்ள வளை-காப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி, பக்தர்க-ளுக்கு அருள்பாலிப்பார். பின்னர், பராசக்தி அம்மனுக்கு வளை-காப்பு உற்சவம், இரவு அம்மன் வீதி உலா, இரவு, சுமார் 12:00 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன், தீமிதி விழா நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !