வெள்ளிக்குறிச்சியில் 1008 திருவிளக்கு பூஜை
ADDED :13 hours ago
மானாமதுரை: வெள்ளிக்குறிச்சியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு உலக நன்மைக்காக நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் வள்ளி, தெய்வானையுடனான முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காக நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையை பாதயாத்திரை குழு தலைவர் ராமகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.முன்னதாக சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.