மீனாட்சி அலங்காரத்தில் மாமாங்கம் பத்ரகாளியம்மன் அருள்பாலிப்பு
ADDED :13 hours ago
கிணத்துக்கடவு; மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவிலில் மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிணத்துக்கடவு அருகில் உள்ள பழமை வாய்ந்த மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இன்று ஆடி நான்காம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறறது. சிறப்பு மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.