உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியதடாகத்தில் லலிதாம்பிகை திருக்கல்யாணம்; பக்தர்கள் பக்தி பரவசம்

பெரியதடாகத்தில் லலிதாம்பிகை திருக்கல்யாணம்; பக்தர்கள் பக்தி பரவசம்

பெ.நா.பாளையம்; பெரியதடாகத்தில் உள்ள லலிதாம்பிகை கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிக்கு, லலிதாம்பிகை, காமேஸ்வரர் திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாகி ஜெகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். மாங்கல்ய சிறப்பு பூஜைக்கு பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், பெரியதடாகம், சின்ன தடாகம், துடியலூர், சோமையம்பாளையம், டி.வி.எஸ்., நகர், ஆனைகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஆன்மிகம், உலக ஒற்றுமை, குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தி, சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில், பங்கேற்றவர்களுக்கு கோயில் நிரவாகத்தின் சார்பில் மஞ்சள் கயிறு, இனிப்பு வழங்கப்பட்டன. தொடர்ந்து வடை, பாயாசத்தோடு கல்யாண விருந்தும் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை லலிதாம்பிகை அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !