உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா துவங்கியது.
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா 7 நாட்கள் நடக்கிறது . விழாவின் முதல் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:30 மணி வரை நித்திய பூஜைகள், பகல் 10:00 மணிக்கு ஆண்டாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், நான்காயிர திவ்ய பிரபந்த சேவை, தீபாராதனை, சற்றுமறை, பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார்.
விழாவின் நிறைவு நாளான வரும் வெள்ளிக் கிழமை 14ம் தேதி காலை ஆண்டாள்நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் தங்க பல்லக்கில் வீதி உலா, மதியம் 12:00 மணிக்கு கண்ணாடி அறையில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில், நுார்தடா அக்காரவடிசில் நெய்வத்தியமும், மாலை ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.