உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமக தொடர்புடைய 17 கோவில்களின் தொன்மை குறித்து ஆய்வு

மகாமக தொடர்புடைய 17 கோவில்களின் தொன்மை குறித்து ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசிமகமும், 12 ஆண்டுக்கு ஒரு முறை மாசி மகாமக விழாவும் வெகுசிறப்பாக நடைபெறும். இதில், மகாமக தொடர்புடைய 12 சைவ மற்றும் 5 வைணவ கோவில்கள் முக்கியத்துவம் பெற்றவை.

இந்நிலையில், மகாமகவிழாவுக்கான முதன்மை கோவிலாக போற்றப்படும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், கடந்த 2025ம் ஆண்டு டிச.1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீதமுள்ள கோவில்களில் திருப்பணிக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

இருப்பினும், கோவில்களில்களின் தொண்மை மாறாமல், திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும் என சென்னை ஐகோர்ட், உத்தரவிட்டு இருந்தது. ஆனால், கடந்த 2012ம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டாலும், முறையாக செயல்பாட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில், த.வெ.க., ஆட்சி அமைந்த பிறகு, நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழ்நாடு பாரம்பரிய ஆணைய குழுவை அமைத்தது. இதன் தலைவராக இந்திய தொல்லியல்துறை முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநரான நம்பிராஜன், தமிழ்நாடு பாரம்பரிய ஆணைய குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, நேற்று நம்பி ராஜன் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் முதற்கட்டமாக கும்ப கோணத்ததில் உள்ள காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், மகாமக குளத்தில் உள்ள 16 சோடச மகாலிங்க உள்ளிட்ட கோவில்களை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !